தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹெரிடேஜ் நெட்ஒர்க்கில் இணைந்த பாலக்காடு ஐ.ஐ.டி.,

ஹெரிடேஜ் நெட்ஒர்க்கில் இணைந்த பாலக்காடு ஐ.ஐ.டி.,

ஹெரிடேஜ் நெட்ஒர்க்கில் இணைந்த பாலக்காடு ஐ.ஐ.டி.,


UPDATED : மார் 13, 2026 04:36 PM

ADDED : மார் 13, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 13, 2026 04:36 PM ADDED : மார் 13, 2026 04:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு:
ஐ.ஐ.டி., தன்பாத்தில் நடைபெற்ற, 2026ம் ஆண்டுக்கான மாநாடு நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஐரோப்பியப் பல்கலைகளை சேர்ந்த கல்வி வல்லுநர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் பாலக்காடு ஐ.ஐ.டி., சார்பில் மின்னியல் துறை இணைப் பேராசிரியர் சபரிமலை மணிகண்டன் மற்றும் சர்வதேச முன்னாள் மாணவர் ரிலேஷன்சிப், உதவி மேலாளர் நிபேதிதா டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலக்காடு ஐ.ஐ.டி.,யின் கல்வி சாதனைகள், ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் நெட்ஒர்க்கிற்கு, ஐ.ஐ.டி., வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து சமர்ப்பித்துள்ளனர்.

பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குநர் சேஷாத்ரி சேகர் கூறுகையில், “ஹெரிடேஜ் நெட்ஒர்க்கில் நிரந்தர உறுப்பினராக அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டது. இந்த அங்கீகாரம், ஐரோப்பாவின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் அறிவியல் துறைகளில் சர்வதேசத் தரத்திலான கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us