sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் மீது புகார் அளிக்க 'ரெரா' அனுமதி

/

தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் மீது புகார் அளிக்க 'ரெரா' அனுமதி

தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் மீது புகார் அளிக்க 'ரெரா' அனுமதி

தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ் மீது புகார் அளிக்க 'ரெரா' அனுமதி

22


ADDED : மார் 14, 2026 07:09 AM

Google News

22

ADDED : மார் 14, 2026 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மாதவரத்தில், ஒப்பந்தப்படி வீடுகளை ஒப்படைக்காத வழக்கில், சுதீஷ் மீது புதிதாக புகார்களை பதிவு செய்ய, 'ரெரா' எனப்படும் ரியல் எஸ்டேட் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், அவரது மனைவி பூர்ணஜோதி ஆகியோர், மாத வரத்தில் உள்ள நிலத்தில், 'லோகா டெவலப்பர்ஸ்' நிறுவனத்துடன் சேர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதில், கட்டப்பட்ட வீடுகள் குறிப்பிட்ட காலத்தில் ஒப்படைக்கப்படவில்லை என, பாலதண்டபாணி உட்பட ஐந்து பேர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

இத்திட்டத்தில் கட்டுமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, பல்வேறு குறைபாடுகளை மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர். இதில், குறிப்பிட்ட சிலருக்கு, கட்டுமான நிறுவனம் மற்றும் நில உரிமையாளர்கள், விற்பனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

எனவே, எஞ்சிய நபர்கள், நில உரிமையாளர்கள் சுதீஷ், பூர்ணஜோதி ஆகியோர் மீது, புதிதாக தங்கள் புகார்களை பதிவு செய்ய அனுமதிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us