sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

கபடியை காதலித்தேன்... கல்யாணத்திற்கு பின் சாதித்தேன்: 'கோச்' கவிதா வென்ற கதை

/

கபடியை காதலித்தேன்... கல்யாணத்திற்கு பின் சாதித்தேன்: 'கோச்' கவிதா வென்ற கதை

கபடியை காதலித்தேன்... கல்யாணத்திற்கு பின் சாதித்தேன்: 'கோச்' கவிதா வென்ற கதை

கபடியை காதலித்தேன்... கல்யாணத்திற்கு பின் சாதித்தேன்: 'கோச்' கவிதா வென்ற கதை


ADDED : மார் 08, 2026 04:18 PM

Google News

ADDED : மார் 08, 2026 04:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழாம் வகுப்பில் இருந்தே கபடி விளையாடி தேசிய, சர்வதேசப் போட்டிகளில் சாதித்தாலும் திருமணத்திற்கு பிறகான பயிற்சியாளர் என்ற பயணத்திற்கு வழிகாட்டி சாதிக்க வைத்தவர்கள் கணவர் அருண்பிரசாத், மாமியார் ஜமுனா தான் என்கிறார் இந்திய கபடி அணி 'கோச்'கவிதா.

'மகளிர் தின ஸ்பெஷலாக' கவிதா கூறியது: சென்னை ஆவடி சேக்காடு கிராமத்தில் பிறந்தேன். என்னோடு சேர்ந்து ஐந்தும் பெண்கள் தான். 14 வயதில் அம்மா உஷா இறந்தார். சிறு வயதிலிருந்தே கபடி மீது காதல் உண்டு. அப்பா செல்வராஜ் ஊக்கத்தில் கபடியை 'வாழ்வாக' தொடர்ந்தேன்.

கல்லுாரியில் படிக்கும் போது பல்கலைக்காக விளையாடினேன். இறுதியாண்டில் போலீஸ் வேலைக்குத் தேர்வானேன். போலீஸ் பயிற்சியாளர் மனோகரன் ஊக்கப்படுத்தினார். ஜிம் பயிற்சியில் காயம்பட்டதால் டாக்டர்கள் விளையாடக்கூடாது என்றனர். பின் பயிற்சி எடுத்து இந்திய அணிக்கு தேர்வானேன்.

2007ல் இந்திய அணி துணை கேப்டனாக 2வது ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அடுத்தது கேப்டனாக 3வது ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றேன். 2009 சவுத் ஏசியன் விளையாட்டில் வீராங்கனையாக பங்கேற்றேன். 2010ல் ஏசியன் கேம்ஸில் முதன்முறையாக கபடி சேர்க்கப்பட்ட போது விளையாடினேன். 2011 வரை பிளேயராக இருந்தேன். நான்காண்டுகள் முதல்வர், கவர்னர், பிரதமரிடம் விருது வாங்கினேன். போலீஸ் வேலையில் பதவி உயர்வு தராததால் 2012ல் வேலையை விட்டேன்.

வழிகாட்டிய திருமண வாழ்க்கை 2013ல் திருமணமானது. போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைக்கும் போது மாமியார் ஜமுனாவையும் அழைத்துச் செல்வேன். எனக்கு கிடைத்த புகழ், மரியாதையை பார்த்த கணவர் அருண் பிரசாத், மாமியார் மீண்டும் கபடியைத் தொடர அனுமதித்தனர்.

குஜராத் ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா அகாடமியில் கபடி பயிற்சியாளருக்கான சிறப்பு பயிற்சி பெற்று தேர்வானேன். 2023 ஏசியன் கேம்ஸில் இந்திய மகளிர் அணிக்கு பயிற்சியாளராக தேர்வானேன். விளையாட்டு துறை உயரிய தயான்சந்த் விருது பெற்றேன். 2025 ஏசியன் சாம்பியன்ஷிப், ஈரானில் நடந்த உலகக்கோப்பை கபடியில் இந்திய அணி தங்கம் வென்றபோது பயிற்சியாளராக இருந்தேன்.

தற்போது தமிழகத்தில் சிறப்பு பயிற்சியாளராக எல்லா மாவட்டத்திற்கும் செல்கிறேன். குடும்பமும் முக்கியம் வீராங்கனைகள் விளையாட்டை மட்டுமே எதிர்காலமாக நினைத்து குடும்பத்தை இழக்கக்கூடாது. இரண்டையும் சமமாக கையாண்டால் பிரச்னை வராது.

திருமணத்திற்கு பின் விளையாட்டு வாழ்க்கையை இழந்து விடக்கூடாது என உறுதியாக இருக்க வேண்டும். குடும்பத்தினருக்கு புரியவைத்து அவர்கள் உதவியுடன் நாம் முன்னேற வேண்டும். திருமணத்திற்கு பிறகான எனது சாதனைகள் இன்னும் அதிகரித்ததற்கு காரணம் குடும்பத்தினரின் ஆதரவு தான். சிங்கிளாக போராடுவதை விட குடும்பத்தினர் நமக்காக கைதுாக்கும் போது வாழ்க்கை சிறப்பாகும் என தன்னம்பிக்கை தருகிறார் சாதனை 'கோச்' கவிதா.






      Dinamalar
      Follow us