ADDED : மார் 15, 2026 05:23 AM

பா டம் சொல்லித் தருவதோடு நிற்காமல், வாழ்க்கை கல்வியையும் கற்றுத்தருகிறது குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி.
இதற்கென நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் மாணவர்களை மூன்று நாட்கள் தங்க வைத்து சிறப்பு பயிற்சி அளிக்கிறது.
முதல் நாள் முதல் நாள் அதிகாலை வாழ்வியல் சிந்தனைகளை அள்ளித்தரும் உற்சாகமான பேச்சு. தொடர்ந்து, மலையேற்ற பயிற்சி. அப்போது வனம், மலை, ஆறு, சுற்றுச்சூழல், மாசு ஆகியவற்றிற்கான தொடர்பு குறித்து விளக்குகின்றனர்.
இரண்டாம் நாள் இரண்டாம் நாள் ரோப் வாக்கிங், ஜிப்லைனில் நடந்து செல்வது உள்ளிட்ட பயிற்சி, பாதுகாப்பு உபகரணங்களுடன் சொல்லித்தருகின்றனர். பேரிடர் சூழல்களில் தற்காத்துக்கொள்வது எப்படி, பிறரை பாதுகாப்பது எப்படி என பயிற்சி அளிக்கப்படுகிறது.
மூன்றாம் நாள் மூன்றாம் நாளில், படித்த படிப்பை எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம், எங்கு எப்படி பேச வேண்டும்; பேசக்கூடாது, உணவு உட்கொள்ளும் விதம், அலுவலகம், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உடை, காலணிகளை எப்படி அணிய வேண்டும், உடலை பராமரிப்பது... இப்படி போகிறது பயிற்சி பட்டியல்.
தேவையான பயிற்சிதான்

