பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் உலக தாய்மொழி நாள் விழா
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் உலக தாய்மொழி நாள் விழா
UPDATED : மார் 13, 2026 01:52 PM
ADDED : மார் 13, 2026 01:54 PM

புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் கல்லுாரி தமிழ் துறையின் முத்தமிழ் மன்றம், கல்லுாரி தர உறுதியளிப்பு குழு, மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், உலகத் தாய்மொழி நாள் மற்றும் மகளிர் தின விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் மதிவாணன் தலைமை தாங்கினார். முன்னாள் தமிழ்துறை தலைவர் பட்டம்மாள் சிறப்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் சேதுபதி நோக்க உரையாற்றினார். புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் பாலகங்காதரன், கல்லுாரி தர உறுதியளிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீத் வாழ்த்தி பேசினர்.
தமிழ்த்துறை துணைப் பேராசிரியர் வஜ்ரவேலு வரவேற்றார். துணைப் பேராசிரியர் சந்திரா அறிமுக உரை ஆற்றினார். கலைக் இலக்கியப் பெருமன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, சக்தி குருநாதன், ஆசிரியர் ஜெயஸ்ரீ, தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி தரணி தொகுத்து வழங்கினார்.

