/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
ஜென் ஜீ லேடீஸ் இப்ப கட்டுறாங்க சாரீஸ்!
/
ஜென் ஜீ லேடீஸ் இப்ப கட்டுறாங்க சாரீஸ்!
ADDED : மார் 08, 2026 05:25 AM

ஜென் ஜீ யுவதிகளின், பேவரைட் உடையாக மாறிவிட்டது புடவை. ஒரு புடவையில் இத்தனை ஸ்டைலா என ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு, நிறைய ஸ்டைல்களில் அணிந்து வந்து அசத்துகின்றனர்.
''கட்டும் விதத்தில்தான் இருக்கிறது மேட்டர்'' என்கிறார், கோவையை சேர்ந்த 'சாரி டிரேபிஸ்ட்' (saree drapist) ஐஸ்வர்யா.
''எத்தனை பேஷன் டிரஸ் வந்தாலும், புடவைக்கு இருக்கும் மதிப்பே தனிதான். சற்று பருமனாக இருப்பவர்களை கூட, சற்று ஒல்லியாக காட்டலாம். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் விரும்புவது, 'இந்தோ-வெஸ்டர்ன்' மாடல் தான்.
நம்மூர் மடிசார் ஸ்டைலையே சற்று மாற்றி, பேன்ட்ஸ் அணிந்திருப்பது தெரியும் வகையில், புடவை கட்டுகின்றனர்.
சட்டை போல பிளவுஸ் தைத்து, அதற்கு மேல் மெல்லிய பிளீட்டிங் எடுத்து புடவை கட்டுவதும், டிரெண்ட் லிஸ்ட்டில் இருக்கிறது.
- சொல்லிக்கொண்டே போகிறார் ஐஸ்வர்யா.

