தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ சுற்றுலா தலங்கள் சூழ்ந் த கதக் மாவட்டம்

 சுற்றுலா தலங்கள் சூழ்ந் த கதக் மாவட்டம்

 சுற்றுலா தலங்கள் சூழ்ந் த கதக் மாவட்டம்


ADDED : பிப் 26, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கதக் மாவட்டம், கர்நாடகாவின் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். ஆனால் இங்கு வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்கள், சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன. கோடைக்காலத்தில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இங்குள்ளன.

லக்ஹுண்டி: லக் ஹுண்டி கதக் மாவட்டத்தின், மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

லக்குன்டியின் பல இடங்களில், தங்கப்புதையல் இருப்பதாக கூறப்படுகிறது.

கதக் நகரின் இதய பகுதியில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் லக்குன்டி உள்ளது. இங்கு மல்லிகார்ஜுன சுவாமி, லட்சுமி நாராயணா கோவில், சோமேஸ்வரர் கோவில் போன்ற, புராதன கோவில்கள் அமைந்துள்ளன. சிற்பக்கலைக்கு பெயர் பெற்றவைகளாகும்.

இந்திரா கிளாஸ் ஹவுஸ்: கதக் நகரில் இருந்து, வெறும் 64 கி.மீ., தொலைவில் உள்ள ஹூப்பள்ளியில், இந்திரா கிளாஸ் ஹவுஸ் உள்ளது. சுற்றுலா பயணியர் விரும்பி பார்க்கும் இடங்களில், இதுவும் ஒன்றாகும்.

இந்த கிளாஸ் ஹவுசில் ஆலோசனை கூட்டங்கள், நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்திரா கிளாஸ் ஹவுஸ், அழகான பூங்கா உட்கொண்டது. சுற்றுலா பயணியர் அமர்வதற்கு, இருக்கைகள் உள்ளன.

குழந்தைகள் விளையாட விளையாட்டு சாதனங்களும் உள்ளன. சுற்றுப்பகுதி மக்கள் வார இறுதி நாட்களில், குடும்பத்துடன் வருகின்றனர்.

சித்தரூடா மடம்: கதக் நகரில் உள்ள, சித்தரூடா மடம் பிரசித்தி பெற்றதாகும். 18ம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற அற்புத தத்துவ ஞானி சித்தரூடா சுவாமிகளை கவுரவிக்கும் வகையில், இந்த மடம் கட்டப்பட்டது.

மகாத்மா காந்தியும் இம்மடத்துக்கு வருகை தந்ததாக கூறப் படுகிறது.

இப்போதும் மன அமைதியை தேடி, ஆயிரக்கணக்கானோர் சித்தரூடா மடத்துக்கு வருகின்றனர். கோடை விடுமுறையில், கதக் வந்து சில வாரங்கள் தங்கி பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us