/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பங்குச்சந்தையில் முதலீடு செய்த வாலிபரிடம் ரூ.54 லட்சம் மோசடி
/
பங்குச்சந்தையில் முதலீடு செய்த வாலிபரிடம் ரூ.54 லட்சம் மோசடி
பங்குச்சந்தையில் முதலீடு செய்த வாலிபரிடம் ரூ.54 லட்சம் மோசடி
பங்குச்சந்தையில் முதலீடு செய்த வாலிபரிடம் ரூ.54 லட்சம் மோசடி
ADDED : மார் 12, 2026 10:13 PM
திருநெல்வேலி:'வாட்ஸாப்'பில் வந்த பங்குச்சந்தை முதலீட்டு தகவலை நம்பி, முதலீடு செய்த வாலிபர், 54 லட்சம் ரூபாயை இழந்தார்.
திருநெல்வேலி டவுனை சேர்ந்த பாலாஜி என்பவரின் வாட்ஸாப் எண்ணுக்கு, பங்குச்சந்தை முதலீடு குறித்த தகவல் வந்துள்ளது. அதை நம்பிய அவர், பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, 54 லட்சத்து 54,459 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால், பணம் திரும்பி கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாலாஜி, சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இணையவழி குற்றங்கள், பண மோசடிகள் குறித்து, உடனடியாக, 1930 என்ற இலவச உதவி எண்ணில் பொதுமக்கள் அழைக்கலாம். அல்லது, சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.