sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசுக்கு ஆதரவு!

/

மத்திய அரசுக்கு ஆதரவு!

மத்திய அரசுக்கு ஆதரவு!

மத்திய அரசுக்கு ஆதரவு!


ADDED : மார் 14, 2026 02:12 AM

Google News

ADDED : மார் 14, 2026 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் நிலவும் நிலையில், நம் மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்கின்றனர். ஆனால், காங்கிரஸ் மட்டும் எதிர்மறை சிந்தனையுடன் செயல்பட்டு, அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இந்த சூழலில், நம் நாட்டின் கண்ணியத்தையும் மதிப்பையும் பிரதமர் மோடி நிலைநிறுத்தியுள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சர், பா.ஜ.,

இது நல்ல உத்தி அல்ல!


நாடு முழுதும் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை நீடிப்பதால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதை, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதுடன் போதிய இருப்பு உள்ளது எனவும் கூறுகிறது. இது, நல்ல உத்தி அல்ல.

மனோஜ் குமார் ஜா ராஜ்யசபா எம்.பி., ராஷ்ட்ரீய ஜனதா தளம்

பினாமிக்கு ஒதுக்கீடு!


தெலுங்கானாவில் சட்டம் - ஒழுங்கு நிலை கவலைக்கிடமாக உள்ளது. விசாரணை முகமைகள் மீது மாநில அரசின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. காங்.,கைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தொட ர்புடைய பினாமி நிறுவனத்திற்கு அரசு ஒப்பந்தங்கள் முறைகேடாக ஒதுக்கப்படுகின்றன .

கே.டி.ராமா ராவ் செயல் தலைவர், பாரத் ராஷ்ட்ர சமிதி






      Dinamalar
      Follow us