sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூரில் மீலாதுன் நபி ஆவணப்படம்

/

சிங்கப்பூரில் மீலாதுன் நபி ஆவணப்படம்

சிங்கப்பூரில் மீலாதுன் நபி ஆவணப்படம்

சிங்கப்பூரில் மீலாதுன் நபி ஆவணப்படம்


மார் 13, 2026

Google News

மார் 13, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது எழுதி, தயாரித்து, இயக்கிய மீலாதுன் நபி என்ற நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் கடந்த வருடம் அக்டோபர் 31ஆம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியீடு கண்டது. கடந்த மாதம் இப்படம் சிங்கப்பூரில் தணிக்கை செய்யப்பட்டு பிஜி 13 வகை சான்றிதழ் பெற்றது. வருகிற மார்ச் 28ஆம் தேதி, தமிழ் முஸ்லிம் ஜமாஅத்தின் மாணவர் கல்வி நிதிக்காக இரண்டு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. பொதுமக்கள், மாணவர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம்.

இப்படம் சிங்கப்பூரின் மத நல்லிணக்கம், அண்டை வீட்டாருக்கு உதவுதல், பின்தங்கிய மக்களுக்கு உதவுதல், பிரதிபலன் பார்க்காமல் சமூகத்திற்கு சேவை செய்தல், சமூக புரிதலை ஊக்குவித்தல் போன்றவை நபிகள் நாயகத்தின் போதனைகளோடு ஒத்துப்போகிறது. மேலும், இந்த ஆண்டு 75ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடும் எங்கள் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் மூலம் சிங்கப்பூரில் முதன்முறையாக இப்படத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம் என்று அமைப்பின் தலைவர் கௌஸ் மரைக்கார் கூறினார்.


- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us