sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/நீரிழிவுக்கு தீர்வாகும் டார்க் சாக்லேட்

நீரிழிவுக்கு தீர்வாகும் டார்க் சாக்லேட்

நீரிழிவுக்கு தீர்வாகும் டார்க் சாக்லேட்


PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று நீரிழிவு. இரண்டு வகைகள் உள்ளன. இதில் இரண்டாவது வகை வித்தியாசமானது.

இந்த வகை நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டால் கண் பார்வை, இதயச் செயல்பாடு ஆகியவை கூட பாதிக்கப்படும். மருத்துவர்கள் இது குறித்து எச்சரித்துள்ளனர்.

ஆனால், நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலை மேற்கொண்ட ஆய்வில், சாக்லேட் சாப்பிடுவது நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் என்றாலே அவர்கள் இனிப்பான பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்று தானே சொல்வர்? இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிகமான பாலும், சர்க்கரையும் சேர்க்கப்பட்ட சாக்லேட் அல்ல. மாறாக இவை இரண்டும் குறைவான அளவில் இருக்கும் டார்க் சாக்லேட். அதாவது முழுக்க முழுக்க கோக்கோ பொருட்கள் மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது கசப்பாக இருக்கும் என்பதால் மக்கள் குறைவாகவே சாப்பிடுவர். ஆனால், இது மிகவும் ஆரோக்கியமானது. இதில் உள்ள ப்ளேவனாய்ட்ஸ் இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்று ஹார்வர்டு பல்கலை ஆய்வு சொல்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெள்ளை சாக்லேட்டுகளைச் சாப்பிட்டால் உடல் எடை கூடுமே தவிர நல்ல பலன்கள் கிடைக்காது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us