PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

01. கனடா நாட்டைச் சேர்ந்த டொரன்டோ பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இஞ்சியில் உள்ள ஃபுரானோடைனோன் (Furanodienone) எனும் சேர்மம் குடல் அழற்சிக்கான சிகிச்சையில் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
![]() |
02. பீட்டாக்ளுகன் (Beta-glucan) என்பது காளான் உள்ளிட்ட எல்லா பூஞ்சைகளிலும் காணப்படுகின்ற ஒரு சேர்மம். வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் நுரையீரல் நோய்களைச் சரிசெய்ய இந்தச் சேர்மம் உதவும் என்று கனடா நாட்டைச் சேர்ந்த எம்.சி. ஹில் பல்கலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
![]() |
03. பளபளப்பான உடலைக் கொண்ட சில காட்டுப் பறவைகள், சொர்க்கப் பறவைகள் (Bird of paradise) என்று அழைக்கப்படுகின்றன. முதல்முறையாக இந்தப் பறவைகளிடம் உயிரி ஒளிரும் தன்மை (Bio fluorescence) இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
![]() |
04. HD 20794 d என்பது நமது பூமியைப் போல 6 மடங்கு நிறையை உடைய கோள். 2011ஆம் ஆண்டே இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதைப் பற்றிய தெளிவான தகவல்கள் இப்போதுதான் வெளிவருகின்றன. இந்தக் கோளில் உயிர்கள் வாழ்வதற்குச் சாதகமான சூழல் இருப்பதாக விஞ்ஞானிகள் யூகிக்கிறார்கள்.
![]() |
05. பூமியிலிருந்து 2,400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது சிக்னஸ் லூப் (Cygnus Loop) எனும் நெபுலா (வாயு, தூசுகளாலான மேகம் போன்ற அமைப்பு). இதன் ஒரு பகுதியான வெய்ல் நெபுலாவின் (Veil Nebula) அழகிய படத்தை ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது.





