PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

1. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைக் கொண்டு வானியலாளர்கள் 3 பிரமாண்டமான நட்சத்திர மண்டலங்களைக் கண்டு பிடித்துள்ளனர். இவை நம்முடைய பால் வீதியைப் போலவே மிகப்பெரியவை.
![]() |
2. அம்பர் என்பது கட்டியாக மாறிய மரப்பிசின். வரலாற்றில் முதல்முறையாக அன்டார்டிகாவில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் இந்தப் பனி கண்டத்திலும் கூட மரங்கள் இருந்துள்ளன என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உறுதிசெய்கிறது.
![]() |
3. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் உயிரியல் ஆய்வாளர்கள் தென்கிழக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் புதிய வகை ஹெர்மிட் நண்டைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ஸ்டிரிகோபகுருஸ் ப்ராகார் செல்லா என்ற விலங்கியல் பெயரைச் சூட்டியுள்ளனர். இவை பொதுவாகக் கடலில் 120 - 260 மீ. ஆழத்தில் வாழ்கின்றன.
![]() |
4. ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான அளவுள்ள நெகிழிகள், நுண் நெகிழிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலகின் எல்லா இடங்களையும் மாசுபடுத்தி வருகின்றன. மேகங்களில் உள்ள நுண் நெகிழிகளால் பருவ காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை கூறியுள்ளது.
![]() |
5. வட பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் ஒரு புதிய கடல் நத்தை இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு பாத்திதேவியஸ் காவ்டாக்டைலஸ் என்று பெயரிட்டுள்ளனர். இது ஒளிரும் ஆற்றல் பெற்ற நத்தைகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.