PUBLISHED ON : டிச 18, 2025 10:19 AM

1. கலிபோர்னியா பல்கலை ஆய்வாளர்கள் லேசர், கிராபைட் உதவியுடன் 'ஆப்டோபிக்சல்' எனும் புதிய திரையை உருவாக்கியுள்ளனர். இதில் லேசர் ஒளி பட்டதும், கிராபைட் தாளிலுள்ள காற்று விரிவடைந்து, பிக்சல்கள் மேலெழும்பித் தொடு உணர்வைத் தருகின்றன. இது பார்வையற்றோருக்கு உதவும்.
![]() |
2. விண்வெளியில் செயற்கைக்கோள் வாயிலாக சூரியஆற்றலைச் சேகரித்து, லேசர் கதிர்கள் வழியாக பூமிக்கு அனுப்பி மின்சாரம் தயாரிக்கலாம் என்கிறது 'ஓவர்வியூ எனர்ஜி' என்ற நிறுவனம். இந்த நுட்பம் வாயிலாக 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் பெற முடியும்.
![]() |
3. ப்ளூ வைரஸ்கள் மனித செல்களுக்குள் நுழைவதை, அதிநவீன நுண்ணோக்கி வாயிலாக விஞ்ஞானிகள் முதன்முறையாக படம்பிடித்துள்ளனர். வைரஸ்கள் செல்லின் மேற்பரப்பில் சறுக்கிச் செல்வதையும், செல்கள் அவற்றுடன் வினைபுரிவதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்க உதவும்.
![]() |
4. சாலமன் மீன்களை வேட்டையாட, பசிபிக் டால்பின்களை'மோப்ப நாய்' போல சில வகை திமிங்கலங்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இரை தேடும் டால்பின்களை, இத்திமிங்கலங்கள் பின்தொடர்ந்து சென்று, மீன் கூட்டங்களைக் கண்டதும் வேட்டையாடுகின்றன. வேட்டையில் மிஞ்சும் இரைகளே டால்பின்களுக்குப் போதும்.
![]() |
5. சூப்பர்சோனிக் விமான இயந்திரத்தை, மின் உற்பத்தி ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தலாம் என்கிறது 'பூம் சூப்பர்சோனிக்' என்ற நிறுவனம். ஒரு ஜெட் இயந்திர ஜெனரேட்டர், 42 மெ.வா., மின்சாரத்தை உற்பத்தி செய்யும். ஜெட் இயந்திரங்கள் எரிபொருளை மிக சிக்கனமாக செலவழிப்பவை. எனவே இந்த புதிய சிந்தனை பரவக்கூடும்.





