தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/அறிவியல் மலர்/அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!

அறிவியல் துளிகள்!


PUBLISHED ON : பிப் 19, 2026 07:32 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2026 07:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ஸ்டெதஸ்கோப்புடன் ஏ.ஐ., இணைந்திருக்கிறது. புதிய 'ஸ்டெத்,' இதய வால்வு நோய்களை 92 சதவீத துல்லியத்துடன் கண்டறிகிறது. இதய ஒலிகளில் உள்ள சின்னஞ் சிறு வேறுபாடுகளை பகுப்பாய்வு செய்ய ஏ.ஐ., உதவுகிறது. இதன் வாயிலாக, ஆரம்பக்கட்டத்திலேயே பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சையை விரைவுபடுத்தலாம்.

Image 1538260


2. மனிதக் கண்களுக்குப் புலப்படாத புறஊதாக் கதிர் சமிக்ஞைகள் வாயிலாக, மான்கள் தகவல் பரிமாறுகின்றன. மரங்களில் அவை ஏற்படுத்தும் உராய்வுகள் புறஊதா ஒளியைப் பிரதிபலிக்கும் 'ஒளிரும் சேதிகளாக' மாறுகின்றன. இனப்பெருக்க காலங்களில், தங்கள் சமூகத்திற்குள் தொடர்புகொள்ள இந்த நுட்பத்தை மான்கள் பயன்படுத்துகின்றன.

Image 1538261


3. பூமியின் மையக் கரு அருகே, கடல்நீரைப் போல 45 மடங்கு அதிக ஹைட்ரஜன் சேமிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், பூமி உருவான போதே நீரும் உருவாகியிருக்க வேண்டும். உயிரினங்கள் வாழத் தேவையான புவி காந்தப்புலத்தை நிலைநிறுத்துவதிலும் ஹைட்ரஜன் மற்றும் நீர் உருவாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Image 1538262


4. சுவிஸ் பிரவுன் வகை பசு ஒன்று, பிரஷ் மூலம் உடலை சொறியக் கற்றுள்ளது. கடினமான தோல் பகுதியை பிரஷின் நார் மூலமும், மென்மையான பகுதியை, கூர்மையில்லாத கைப்பிடி மூலமும் சொறிந்து, தினவைத் தீர்த்துக்கொள்கிறது. மனிதக் குரங்குகளிடம் மட்டுமே 'கருவி பயன்பாடு' இருந்தது. கால்நடைகளுக்கும், அந்த அறிவு இருப்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

Image 1538264


5. சீனாவின் சிங்குவா பல்கலையின், 'டிஷ்' தொழில்நுட்பம், 3டி அச்சுத் துறையில் சாதனை படைத்துள்ளது. இது, 'ஹாலோகிராபிக்' ஒளிமுறையில் வெறும் 0.6 வினாடிகளில் நுணுக்கமான உருவங்களை முப்பரிமாணத்தில் அச்சிடும். நுண்-ரோபோக்கள், போட்டோனிக் சில்லுகளை பலமடங்கு வேகமாக தயாரிக்க இது உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us