sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

அறிவியல் துளிகள்

/

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்

அறிவியல் துளிகள்


PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. பொதுவாக சூரிய ஆற்றல் பொறியியலில் துாய்மை முக்கியம். சூரிய மின் தகடுகள் செய்ய தற்போது பயன்படும் 'பெரோவ்ஸ்கைட்' என்ற பொருளில் உள்ள சில அசுத்தங்களை அகற்றவே முடிவதில்லை. இருந்தாலும், இந்த மாசுகளே மின்னோட்டத்தைத் தடையின்றி நகர்த்த உதவுவதாக ஆஸ்திரிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Image 1571079


2. டோக்கியோவில் உள்ள ஆய்வாளர்கள், ஒரு புத்திசாலி தலையணையை உருவாக்கியுள்ளனர். இது உறங்குபவர்களின் தலை இருக்கும் நிலையை கண்டறிந்து, சரியான கோணத்திற்கு மாற்றுகிறது. இது கழுத்து வலி மற்றும் முதுகெலும்பு பிரச்னைகளைத் தவிர்க்கிறது.

Image 1571080


3. தென் கொரியாவின் 'போஸ்டெக்' பல்கலை ஆய்வாளர்கள், ஒரு புதிய கழுத்துப் பட்டையை உருவாக்கியுள்ளனர். இது தொண்டை மற்றும் சருமத்தின் நுட்பமான அசைவுகளை உணர்ந்து பேச்சாக மாற்றித் தருகிறது. குரலிழந்த நோயாளிகளுக்கு இந்தக் கருவி உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Image 1571081


4. ஜப்பான் விண்வெளிக்கு அனுப்பியுள்ள சிறிய கியூப்சாட் செயற்கைக்கோளில், பெரிய ஆன்டெனாவை மடிக்க, காகித மடிப்புக் கலையான 'ஓரிகாமி' முறை பயன்பட்டுள்ளது. இது விண்வெளி சுற்றுப்பாதையில் 25 மடங்கு பெரியதாக விரியும்.

Image 1571082


5. அமெரிக்காவிலுள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலை விஞ்ஞானிகள், நீரால் நிரப்பப்பட்ட குழாய்களில் சிறிய பிளாஸ்மா மின்னல்களைப் பாய்ச்சுவதன் வாயிலாக, மீத்தேனை மெத்தனால் எரிபொருளாக மாற்றியுள்ளனர். புவி வெப்பமடைதலுக்குக் காரணமான மீத்தேனை ஒரே கட்டத்தில் சுத்தமான எரிபொருளாக மாற்ற இந்த முறை உதவும்.






      Dinamalar
      Follow us