தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விசித்திர வால் விலங்கு!

விசித்திர வால் விலங்கு!

விசித்திர வால் விலங்கு!


PUBLISHED ON : ஜூலை 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா தீவுகளில், விசித்திர வால் உடைய பாலுாட்டி விலங்கினமான போஸம் அதிகம் காணப்படுகிறது. நகர தோட்டங்களிலும், காடுகளிலும் மிகச் சாதாரணமாக இவை உலா வருவதை காணலாம்.

யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வசிக்கிறது, வளை வால் போஸம். வசிப்பதற்கு, 'ட்ரே' எனப்படும், பந்து போன்ற கூட்டை, மரக்கிளைகளில் அமைக்கிறது. கூடு கட்டத் தேவையான குச்சி, இலைகளை வாலில் சுருட்டி எடுத்து செல்வதை பார்க்க, வினோதமாக இருக்கும்.

இதன் உடல், பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. வெண்மை நிற நீண்ட வால் தான், இதன் சிறப்பம்சம். குரங்கு வால் போல, மரக்கிளைகளை உறுதியாக பற்றி கொள்ள இவை உதவுகிறது. இந்த வகை போஸம், இரவு நேரத்தில் உணவை தேடும். பெரும்பாலும் யூகலிப்டஸ் இலைகள், மலர்கள், பழங்களை உணவாக உட்கொள்ளும். கங்காருவை போலவே குட்டிகளை பையில் சுமக்கும். குட்டிகள் சற்று வளர்ந்தவுடன், முதுகில் சுமந்தபடி, மரத்திற்கு மரம் தாவும். சாதுவான விலங்கு என்பதால், ஆஸ்திரேலிய மக்களுடன் நெருக்கமான பிணைப்பை கொண்டுள்ளது.

இந்த இனத்தில் மிகப் பெரியது, துாரிகைவால் போஸம். துாரிகை போன்ற வால் இருப்பதால் இப்பெயர் வந்தது. இது, அனைத்து உண்ணி வகையை சேர்ந்தது. இதை விட சற்று சிறியது வளை வால் போஸம். வளையம் போன்று வால் உடையது.

மிகச்சிறியது, 10 கிராம் எடையுள்ள, டாஸ்மேனியன் பிக்மி போஸம். இதை குள்ளப்போஸம் என்பர். இது பூச்சிகளை தின்னும். ஹனி போஸம் என்பது, பூந்தேனை மட்டுமே உண்ணக் கூடியது.

இந்த விலங்கினத்தின் மார்பில் செந்நிற திரவம் சுரக்கும். அந்த வாசனை மற்றும் ஒலியால் தன் எல்லைக்குட்பட்ட பகுதியை பிற போஸம்களுக்கு உணர்த்துகிறது. மரக்கிளை, பொந்து, பாறை இடுக்கில் வசிக்கும். வீட்டின் மேற்கூரையிலும் உறைவிடத்தை அமைத்துக் கொள்கிறது. ஆஸ்திரேலியா கண்ட பகுதியில் வாழும் வினோத விலங்குகளில் ஒன்றாக உள்ளது.

- திருநிறைச் செல்வன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us