தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கெடுவான் கேடு நினைப்பான்!

கெடுவான் கேடு நினைப்பான்!

கெடுவான் கேடு நினைப்பான்!


PUBLISHED ON : நவ 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாலியமங்கலத்தில் சிறுமி வாசுகி, பெற்றோருடன் வசித்து வந்தாள். அவள் வீடு, மலைகளின் நடுவே ரம்மியாக அமைந்திருந்தது. வாசுகிக்கு பூக்கள் என்றால் கொள்ளை பிரியம். எனவே, வீட்டைச் சுற்றி பூந்தோட்டம் அமைக்க முடிவு செய்தாள். பக்கத்து ஊர்களில் பூச்செடி மற்றும் விதைகள் வாங்கி வந்தாள். அவற்றை நட்டு தவறாமல் தண்ணீர் ஊற்றி, உரம் போட்டாள். செடிகள் செழிப்புடன் வளர்ந்தன.

அவை வளர வளர வாசுகி மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. நெகிழ்வுடன் ஆனந்தக் கூத்தாடினாள். புதுப்புதுச் செடிகளை வாங்கி நட்டு வளர்க்க ஆரம்பித்தாள். பள்ளி செல்லும் முன், பள்ளி முடிந்த பின் என தோட்டத்தில் நேரத்தை செலவிட்டு மகிழ்வாள்.

நாட்கள் கடந்தன. தோட்டத்தில் மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா வெள்ளை என, எண்ணிடலங்கா பூக்கள் கண்ணுக்கும், மனதுக்கும் இதம் அளித்தன. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தாள், வாசுகி. தோட்டத்தை அனைவருக்கும் பெருமையுடன் காட்டினாள். அதை பார்த்து பாராட்டினர்.

ஒரு தோழியான ஆனந்தி மட்டும் பொறாமையுடன் தோட்டத்தை பார்த்ததும் எரிச்சலுற்றாள்.

'நானும் தான் பார்த்துப் பார்த்து வீட்டுத் தோட்டத்தை பராமரித்து வருகிறேன். இத்தனை பெரிய பெரிய பூக்கள் அவற்றில் பூப்பதில்லையே' என பொறாமை கொண்டவள், எப்படியாவது நாசம் செய்ய எண்ணினாள். ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள நினைத்தாள் ஆனந்தி.

அன்று இரவில் வாசுகி வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்தாள் ஆனந்தி. செடிகளை வெட்டி பாழ் செய்து சென்றாள்.

காலையில் தோட்டத்திற்கு வந்த வாசுகி அதிர்ச்சி அடைந்தாள். அவளது பெற்றோரும் அதிர்ந்தனர்.

வாசுகி உருவாக்கிய அழகிய தோட்டம் அலங்கோலமாகி கிடந்தது. வாசுகியை எவ்வளவு தேற்றியும் அழுகையை நிறுத்த முடியவில்லை. அன்று பள்ளிக்கு கூட செல்ல முடியவில்லை. அதை அறிந்து ஆனந்தக் கூத்தாடினாள் ஆனந்தி.

ஒரு வாரம் கடந்தது.

அன்று வீட்டுத் தோட்டத்தை பார்த்த ஆனந்திக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. செடிகள் வாடி வதங்கி தொங்கி கொண்டிருந்தன. எவ்வளவோ தண்ணீர் ஊற்றினாள்; உரங்களிட்டு சரி செய்ய முயன்றாள். ஒன்றும் பலனலிக்கவில்லை.

ஆனந்தியின் தோட்டத்தில் அத்தனை செடிகளும் வதங்கின. தோட்டம் இருந்த இடம் தெரியாமல் போனது. அப்போது தான், தவறை உணர ஆரம்பித்தாள் ஆனந்தி.

இனி பொறாமைப்படக் கூடாது என முடிவு செய்தாள். மற்றவர்களுக்கு செய்யும் தீமை, நமக்கே கஷ்டத்தை கொடுக்கும் என்பதை உணர்ந்தாள். யாருக்கும் தீங்கு நினைக்கக் கூடாது என, மனம் திருந்தி, வாசுகியிடம் மன்னிப்புக் கேட்டாள், ஆனந்தி.

குழந்தைகளே... நல்லது செய்தால் நன்மை கிடைக்கும் என்பதை உணருங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us