sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஆங்கிலத்தில் வசனம்!

/

ஆங்கிலத்தில் வசனம்!

ஆங்கிலத்தில் வசனம்!

ஆங்கிலத்தில் வசனம்!


PUBLISHED ON : பிப் 21, 2026

Google News

PUBLISHED ON : பிப் 21, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி, சாப்டர் உயர்நிலை பள்ளியில், 1959ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த பேட்டி பிலிப், எங்களுக்கு ஆங்கில பாடமும் நடத்துவார்.

அவர், ஆங்கில இலக்கண பாடத்தை நடத்தும் விதம் மிக எளிமையாகவும், நன்கு புரியும் படியும் இருக்கும். ஆங்கில பாடத்தில் உள்ள நாடகங்களை கற்றுத்தரும் போது, அதில் உள்ள கதாபாத்திரங்களை போலவே, மனப்பாடமாக ஆங்கில வசனம் பேசுவார்.

அது, எங்களை வியப்பில் ஆழ்த்தும். அத்துடன், வகுப்பறையில் மாணவர்களையும் அழைத்து, நடிக்க வைப்பார். அப்போது, பக்கத்து வகுப்பில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட, எங்கள் வகுப்பறையின் வாசல் மற்றும் ஜன்னல் அருகே நின்று, ரசித்து பார்ப்பர். அது, எங்களுக்கு பெருமையாக இருக்கும்.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற பின், நகராட்சியில் பணியில் சேர்ந்தேன். அங்கு, 40 ஆண்டுகள் பணியாற்றி, 2021ல் சிறப்பு நிலை நகராட்சி மேலாளராக பணி ஓய்வு பெற்றேன்.

தற்போது என் வயது, 81. ஆங்கில நாளிதழ்களுக்கும், 'வாசகர் கடிதம்' பகுதிக்கு எழுதி வருகிறேன். அவ்வப்போது, பிரசுரம் ஆகும் என் கடிதங்களை படித்து, என் நண்பர்களும், உறவினர்களும் பாராட்டு தெரிவிப்பது வழக்கம்.

ஆங்கிலத்தை எளிமையாக கற்றுத்தந்து, இதற்கு காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் பேட்டி பிலிப்பை நன்றியுடன் நினைத்து பார்க்காத நாளே இல்லை எனலாம். அவரை போற்றி வணங்குகிறேன்.

- ச.நல்லசிவன், திருநெல்வேலி. தொடர்புக்கு: 94452 15667






      Dinamalar
      Follow us