
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது, 'அவகோடா' பழம். இது, 'ஆனைகொய்யா' என்று, தமிழில் அழைக்கப்படுகிறது. மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் குவாடமாலா நாடுகளை பூர்வீகமாக கொண்டது. 16ம் நுாற்றாண்டில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இருந்து, உலகம் முழுவதும் பரவியது.
இப்பழத்தில், மனித உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும், 'ஆன்டி-ஆக்ஸிடன்ட்' உள்ளிட்டவையும் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும். கர்ப்பிணியர் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர், இதை உண்பதை தவிர்ப்பது நல்லது. -

