PUBLISHED ON : பிப் 07, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1
தேங்காய் துருவல் - அரை மூடி
சர்க்கரை - 1 கப்
முந்திரி, ஏலக்காய் துாள், நெய் - தேவையான அளவு
செய்முறை:
பீ ட்ரூட்டின் தோலை சீவி, துருவிக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாணலியில் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவலை போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், சர்க்கரை சேர்த்து கிளறவும்.
சிறிதளவு நெய்யில் முந்திரியை வறுத்து, பீட்ரூட் கலவையில் சேர்க்கவும். வாணலியில் ஒட்டாமல் இறுகி வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி, விருப்பமான அளவில் துண்டுகள் போட்டால், பீட்ரூட் தேங்காய் பர்பி தயார். குழந்தைகள் கேட்டு வாங்கி ருசிப்பர்.
- ம.ரஞ்சனி, கடலுார்.

