
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி -- 1 கப் வெல்லம் -- 1 கப் பால் -- 200
மி.லி., கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்துாள் -- சிறிதளவு வெண்ணெய், உப்பு, தண்ணீர் -- தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில் வேக வைக்கவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். அதில் பால் ஊற்றி கொதித்ததும் அரைத்த மாவை சேர்த்து கிளறவும். பின், வெந்த கடலைப்பருப்பு, உப்பு, தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய்த்துாள் துாவி கிளறி இறக்கவும். பெரிய தட்டில் வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி ஆறியதும் துண்டுகளாக்கவும்.
சுவைமிக்க, 'வெண்ணெய் புட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- ஆ.ஜாக்ரினா, மதுரை.

