
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கேரட் - 2
பால் -1 லிட்டர்
சர்க்கரை - அரை கப்
வறுத்த முந்திரி, திராட்சை - தலா 10
ஏலக்காய் துாள் - சிறிதளவு
செய்முறை:
தோல் சீவி, துண்டுகளாக்கிய கேரட்டுடன், பால் ஒரு கப் சேர்த்து, மூன்று விசில் வரும் வரை குக்கரில் வேக விடவும். ஆறியதும், சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதில், மீதமுள்ள பால் சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கவும். ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். ஆறியதும், பிரிஜ்ஜில் சிறிது நேரம் குளிர வைத்து பரிமாறவும். குழந்தைகள் ஆசையுடன் சாப்பிடுவர்.
- க.வசந்தி, சென்னை.

