PUBLISHED ON : செப் 12, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
சவ் சவ் காய் - 1
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு,
புதினா, மல்லிதழை,
உப்பு, எண்ணெய்,
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
ச வ் சவ் காயை தோல் சீவி, துருவி, சூடான எண்ணெயில் வதக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய், நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு, புதினா, மல்லிதழை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும். பின், தண்ணீர் சேர்த்து அரைத்து, கடுகு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
சத்து மிக்க, 'சவ் சவ் சட்னி' தயார். தோசை, இட்லியுடன் தொட்டு சாப்பிட, சுவை தரும்.
- ரா.கீதாலட்சுமி, உளுந்துார்பேட்டை.
தொடர்புக்கு: 94425 85737
