PUBLISHED ON : அக் 11, 2025

எனக்கு பிடித்த சிறுவர் மலருக்கு வணக்கம்.
என் பாட்டன் காலத்தில் இருந்து என் குடும்பத்தினர் சண்டை போட்டு படிக்கும் மலர் சிறுவர் மலர் மட்டுமே. அதில் உள்ள ‛மொக்க ஜோக்ஸ்' பக்கத்திலிருந்து ‛ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனுபவங்கள்' பக்கம் வரை நகைச்சுவையாகவும், நம்மை மேம்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. அனைத்து குழந்தையையும் உற்சாகப்படுத்தும் விதமாக இருக்கும் ‛ஓவிய பக்கம்' உருவாக்கி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தந்து அவர்களின் கலைத்திறமையை வளர்க்கிறது. மேலும் புதிர்கள் நிறைந்த பக்கங்கள் மிகவும் சுவையாகவும், அறிவுக்கு வேலை கொடுக்கும் விதமாகவும் உள்ளது. எனக்கு எல்லா மலரை விடவும் மிகவும் பிடித்த மலர் சிறுவர்மலர் ஆகும். மொத்தத்தில் சிறுவர்மலர் எல்லோரையும் கவரும் மலர்.
இப்படிக்கு அன்புள்ள,
உ.அ.சத்யா
8ம் வகுப்பு,
டி.ஏ.வி.பள்ளி,
சென்னை.
தொடர்புக்கு: 94868 04848