PUBLISHED ON : நவ 08, 2025

சிறுவர் மலர் பொறுப்பாசிரியருக்கு வணக்கம். என் தாத்தா (அதாவது என் அம்மாவின் தந்தை) தினமலர் நாளிதழின் அபிமானி. ஆகவே இன்றும் என் பெரியம்மா, மாமா, என் அம்மா மூன்று பேரும் தினமலர் வாசிப்பாளர்கள். எனவே மூன்றாவது தலைமுறையான அவர்களின் பிள்ளைகளான நாங்கள் அனைவரும் இயல்பாகவே தினமலர், சிறுவர் மலர், வாரமலர், ஆன்மிகமலர் வாசிப்பதையும், அதில் உள்ள கருத்துக்களை ஆலோசிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளோம். சிறுவர் மலரில் வெளியாகும் சிறுகதைகள், இளஸ் மனஸ், ஸ்கூல் கேம்பஸ் பகுதிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.
நான் பத்தாம் வகுப்பில் தமிழில் 99 மதிப்பெண் பெற்றுள்ளேன். இதற்கு நான் சிறுவர் மலரை சிறுவயதில் இருந்து வாசிப்பதும் மிக முக்கிய காரணம் என நம்புகிறேன், எனக்கு தமிழில் எழுத்து பிழை வராது. பாடங்களை வாசிக்கும் போது வகுப்பில் திக்காமல் சரளமாக வாசித்து ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றுள்ளேன்.
சிறுவர் மலரில் எங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி.
இப்படிக்கு
து.துர்கா
11ம் வகுப்பு,
சாய்ராம் லியோ முத்து பப்ளிக் பள்ளி,
சென்னை.

