PUBLISHED ON : செப் 19, 2026

அ நிறம் | அளவு
சனிக்கிழமை தோறும் தவறாமல் தினமலர் சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். இதழில் பள்ளி மாணவ, மாணவிக்கு தேவையான நிறைய தகவங்கள் இடம் பெற்று வருகின்றன.
முக்கியமான பல தகவல்களை சேமித்து வருகிறேன். இதழில் இடம் பெறும் ‛மொக்க ஜோக்ஸ்' வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. ‛ஸ்கூல் கேம்ப்ஸ்' பகுதி பள்ளி நினைவுகளை ஞாபகப் படுத்துகிறது. வண்ணம் நிறைந்த மலர்களாக, வாசனை வீசும் மலர்களாக எங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் என்றும் நீங்கா நினைவோடு இடம் பெற்று வருகிறது.
சனிக்கிழமை என்றாலே குஷியாகி விடுகிறேன் நானும் எனது அக்காவும்!
நன்றி
மா.கவிநிஷா
7ம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி,
மேலப்பாவூர், தென்காசி.
