PUBLISHED ON : செப் 26, 2026

அ நிறம் | அளவு
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்.
நான் தினமலர் - சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகி என்பதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் சீக்கிரம் எழுநது, முதலில் சிறுவர் மலரை முழுமையாக வாசித்த பிறகே பள்ளிப் பாடங்களைப் படிக்க தொடங்குவேன்.
சிறுவர் மலரில் வெளிவரும் சின்னச் சின்னக் கதைகள், சுவையான தகவல்கள், புதிர்கள், மாணவர்களுக்கான சிறப்புப் பகுதிகள் ஆகியவை என்னை மிகவும் கவர்கின்றன. தொடர்ந்து வாசித்து வந்ததன் பலனாக, என் வாசிப்புத் திறன் வேகமாகவும், தெளிவாகவும், பிழையின்றியும் வளர்ந்துள்ளது. இதை் கவனித்த என் தமிழாசிரியர் என்னைப் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.
இப்படிக்கு
ச.அபர்ணா ஸ்ரீ
9ம் வகுப்பு,
ஸ்ரீ ரமண வித்யாலயா மாண்டிசோரி பதின்ம மேல்நிலைப் பள்ளி,
ராஜபாளையம், விருதுநகர்.
தொடர்புக்கு: 95007 68469
