PUBLISHED ON : அக் 10, 2026

அ நிறம் | அளவு
சிறுவர் மலரின் பொறுப்பாசிரியருக்கு வணக்கம். நான் சிறிய வயதில் இருக்கும் போது என் பாட்டியையும் அம்மாவையும் சிறுவர் மலரைப் படிக்க வைத்து கதைகளைக் கேட்பேன். இப்போது நானே மூன்று வருடங்களாகப் படித்து வருகிறேன். ‛இளஸ் மனஸ்' பகுதியில் சிறியவர்கள் மற்றும் பெரியோர்கள் தகுந்த வழிகாட்டுதலைப் பெறுகின்றனர். ‛ஸ்கூல் கேம்ப்ஸ்' பகுதியில் அனுபவங்கள் என் பள்ளி அனுபவங்களை நினைவுபடுத்துகின்றன. இத்தனை சிறந்த பகுதிகள் உடைய சிறுவர்மலர் உலகம் போற்றும் மலராக மாற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜெ.வினய்,
9ம் வகுப்பு,
சி.எஸ்.அகாடமி பள்ளி,
திருப்பூர்.
தொடர்புக்கு: 96298 98648
