PUBLISHED ON : நவ 07, 2026

அ நிறம் | அளவு
பொறுப்பாசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம்
என் அப்பா வழி தாத்தா, எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் தினமலர் நாளிதழ் வாசகர். அவரின் தூண்டுதலால் ஐந்து ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆரம்பத்தில் சுவாரசியம் இல்லாமல் படிக்க ஆரம்பித்த நான், நாளடைவில் சிறுவர் மலர் ஒரு தகவல் களஞ்சியமாகவும், சிந்திக்கும் திறனை வளர்க்கும் ஒரு உந்து விசைக் கருவியாகவும் விளங்குவதை மனமார உணர்ந்தேன்.
பள்ளி இறுதி ஆண்டின் பாடச் சுமைகளுக்கு இடையே, சிறுவர்மலர் இதழை படிப்பதால், மனம் ஒரு முகமாகி சிந்தனை சீர்படுகிறது.
சிறுவர்மலர் இதழுக்கு என் மனமார்ந்த நன்றி.
இப்படிக்கு
எஸ்.கே.ஸ்ரீதீப்ஷிகா
12ம் வகுப்பு,
ஜெயின் வித்யாலயா, பள்ளி, மதுரை.
