PUBLISHED ON : செப் 06, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
துாதுவளை - 1 கப்
கறிவேப்பிலை - 0.25 கப்
துருவிய
தேங்காய் - 0.5 கப்
சின்ன வெங்காயம் - 15
உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு -
தலா 1 மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு - தேவையான அளவு
உப்பு, புளி, எண்ணெய், தண்ணீர் - சிறிதளவு.
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், துண்டாக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், துாதுவளை, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். கலவை ஆறிய பின் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
சுவைமிக்க, 'துாதுவளை கறிவேப்பிலை துவையல்!' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சளி, இருமலை விரட்டி ஆரோக்கியம் தரும்.
- எஸ்.ஆஷிக்கா, பட்டுக்கோட்டை.