PUBLISHED ON : ஜூலை 18, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
கருப்பட்டி - 250 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
பாசி
பருப்பு - 50 கிராம்
நெய், ஏலக்காய் துாள் - சிறிதளவு
வறுத்த முந்திரி,
திராட்சை, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, பாசி பருப்பை நீரில் நன்றாக வேக வைக்கவும். கருப்பட்டியை நீரில் கரைத்து, கொதிக்க வைத்து, வடிகட்டி அதில் ஊற்றி கிளறவும். பின், நெய், ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
சுவை மிக்க, 'கருப்பட்டி பொங்கல்' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- சி.மகேஸ்வரி, கோவை.
தொடர்புக்கு: 95784 88434
