sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

சுவாரஸ்ய தகவல்கள்!

/

சுவாரஸ்ய தகவல்கள்!

சுவாரஸ்ய தகவல்கள்!

சுவாரஸ்ய தகவல்கள்!


PUBLISHED ON : பிப் 21, 2026

Google News

PUBLISHED ON : பிப் 21, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'எம்.வி., அகஸ்டா பைக்ஸ்' என்பது, இத்தாலியில் தயாரிக்கப்படும் அதி உயர் தொழில்நுட்ப மோட்டார் சைக்கிள்கள். 1948 முதல் 1976ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு மோட்டார் சைக்கிள் பந்தயங்களில், எம்.வி., அகஸ்டா வாகனங்கள், 267 முறை 'சாம்பியன்ஷிப்' பட்டங்கள் வென்றன. இது ஓர் உலக சாதனையாக இடம் பெற்றுள்ளது

* சீனாவில், எந்தக் கடையிலாவது சிலுவைச் சின்னம் இருந்தால், அக்கடையின் சொந்தக்காரர் ஒரு கிறிஸ்துவர் என்று அர்த்தம் அல்ல; அது, அடகுக் கடை என்பதன் அடையாளம். சீனாவின் எல்லா அடகுக் கடைகளிலும், சிலுவைச் சின்னம் இடம் பெற்றிருக்கும்

* அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களில் ஜிம்மி கார்ட்டர் மட்டுமே, மருத்துவமனையில் பிறந்தவர். இவருக்கு முன் அமெரிக்க அதிபர்களாக இருந்த, 38 பேருமே, அவரவர் வீட்டிலேயே பிறந்தவர்கள்

* கி.பி., 218ல், ரோமில் ஒரு சட்டம் அமலில் இருந்தது. அதன்படி, ரோமானியர்கள் யாருமே, 14 கிராம் தங்கத்திற்கு மேல் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை

* ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே அமைந்துள்ளது நியூகினியா தீவு. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவு இது. இங்கு, வெகு காலம் வரை, காசுக்குப் பதிலாக, நாயின் பற்களையே பயன்படுத்தி வந்தனர்

* அமெரிக்காவில், 54 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 9 சதவீதம் பேர் இந்திய வம்சாவளி டாக்டர்கள். அமெரிக்காவில் குடியேறியுள்ள வேற்று நாட்டு டாக்டர்களில், இந்தியர்கள் 52 சதவீதம் பேர்.

- பழனிசாமி சின்னையா






      Dinamalar
      Follow us