PUBLISHED ON : ஆக 22, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 2 கப்
உருளைகிழங்கு - 1
வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து நன்கு மசிக்கவும். அதனுடன் கம்பு மாவு, நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், துண்டாக்கிய பச்சை மிளகாய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசையவும். பின், சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாக்கி வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான, 'கம்பு ஆலு சப்பாத்தி' தயார். தொட்டுக் கொள்ள பக்க உணவு தேவையில்லை; அப்படியே சாப்பிடலாம். சுவை அள்ளும்.
- கூ.முத்துலட்சுமி, ராமநாதபுரம்.
