PUBLISHED ON : ஜூலை 25, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
முளை கட்டிய கம்பு மாவு - 1 கப்
பொடித்த வெல்லம் - 1
கப்
அரிசி மாவு - கால் கப்
துண்டாக்கிய தேங்காய் - கால் கப்
உப்பு,
ஏலக்காய் துாள், முந்திரி, தண்ணீர், நெய் - தேவையான அளவு.
செய்முறை:
மு ளை கட்டிய கம்பு தானிய மாவு, அரிசி மாவு, பொடித்த வெல்லம், சிறு துண்டுகளாக்கிய தேங்காய், ஏலக்காய் துாள், பொடித்த முந்திரி, உப்புடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலக்கவும். பணியார சட்டி சூடானதும், குழிகளில் நெய் தடவி மாவை ஊற்றவும். வெந்ததும், மறுபுறம் திருப்பி போடவும். பொன்னிறமானதும் எடுக்கவும்.
சுவை மிக்க, 'கம்பு பணியாரம்!' தயார். சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- து.மோகனசுந்தரி, சென்னை.
