
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
கற்பூரவல்லி இலை - 10
பச்சை மிளகாய் - 3
சின்ன
வெங்காயம் - 20
எண்ணெய், உளுந்தம் பருப்பு, தேங்காய் துருவல்,
பெருங்காயத்துாள் - சிறிதளவு
பூண்டு, கொத்தமல்லி தழை, புளி, உப்பு, தண்ணீர்
- தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, துண்டாக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், பூண்டு, பெருங்காயத்துாள், கற்பூரவல்லி இலை, கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஆறிய பின், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
சூப்பரான, 'கற்பூரவல்லி துவையல்!' தயார். சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட அபாரமாக இருக்கும். சளித் தொல்லை நீங்கும்.
- எஸ்.லோகநாயகி, ஈரோடு.

