
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள் :-
பச்சரிசி மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் துாள் , தேங்காய் துருவல் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:-
பொடித்த வெல்லத்தில், அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். வெல்லம் கரைந்ததும், அதனுடன் பச்சரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் துாள் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை கரண்டியால் எடுத்து அப்பம் போல் ஊற்றவும். பொன்னிறமாக வெந்ததும், எடுத்து விடவும்.
பஞ்சு போன்ற மென்மையான, இனிப்பான அப்பம் தயார். சுவையாக இருக்கும் இந்த அப்பம், வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
- நிவேதிதா வினோத், சென்னை.
தொடர்புக்கு: 98848 20224

