
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
உலர்த்திய கறிவேப்பிலை - 2 கப்
பொரிகடலை - 1 கப்
பாதாம் பருப்பு - 15
பேரீச்சம்பழம் - 15
நாட்டு சர்க்கரை - 50 கிராம்
ஏலக்காய், நெய் - தேவையான
அளவு.
செய்முறை:
பொரிகடலை, பாதாம் பருப்பு, கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும். அத்துடன் விதை நீக்கிய பேரீச்சம்பழத்தை சேர்த்து வதக்கவும். ஆறியதும் அரைத்து, ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, நெய் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
சுவை மிக்க, 'கறிவேப்பிலை லட்டு!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- ர.அம்பிகா, சென்னை.