sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வினோத தீவு! (16)

/

வினோத தீவு! (16)

வினோத தீவு! (16)

வினோத தீவு! (16)


PUBLISHED ON : நவ 15, 2025

Google News

PUBLISHED ON : நவ 15, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு தீவில் குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்க திட்டமிட்டு செயல்பட்டனர். சுரங்கம் அமைந்திருந்த பகுதிக்கு சென்று, பழங்குடியின குட்டி மனுஷங்களின் தலைவர்களிடம் பேசி தகவல்கள் அறிந்தனர். சந்தேகத்தில் விசாரித்த சுரங்கக்காரர்களுக்கு சாமார்த்தியமாக பதில் தந்து புதிய திட்டம் ஒன்றை வகுத்தனர் சிறுமியர். இனி -

புதிய திட்டத்தை சிறுமியர் விவரித்த போது குட்டி மனுஷங்களின் தலைவர்கள் வியந்தனர்.

''அட... எங்களுக்கு இது தோன்றவே இல்லையே. ஆனால் திட்டப்படி பழைய சுரங்கத்திற்குள் சென்று அங்கிருந்து மண்ணை தோண்டி பாதை அமைப்பது சாத்தியமில்லை. பழைய சுரங்கம் இருக்கும் பகுதிக்கு சுரங்கக்காரர்கள் அவ்வப்போது வந்து செல்வர்...''

இக்கட்டுகளை விவரித்தார் கோயா.

''பழைய சுரங்கத்திலிருந்து பாதையை தோண்ட துவங்க கூடாது. அப்படி தோண்டினால் நீங்கள் சொல்வது போல சுரங்கக்காரர்கள் பார்வையில் பட்டு விட வாய்ப்பு உண்டு. எனவே, தற்போதைய சுரங்கத்திலிருந்து பழைய சுரங்கம் நோக்கி பாதையை தோண்ட வேண்டும்...'' என்றாள் ரீனா.

''சூப்பர் ரீனா... அது தான் சரியாக இருக்கும்...'' என்றாள் மாலினி.

கோயாவுக்கும் சிறுமியர் சொல்ல வருவது புரிந்தது.

''நல்ல திட்டம். ஒவ்வொரு முறை ரத்தினங்களை எடுக்க வெடி மருந்து வைக்கும் போதும், சுரங்கத்தின் பக்கவாட்டில் பழைய சுரங்கத்தை நோக்கிய திசையில் குழி தோண்டி வெடிமருந்தை வைத்தபடியே போக வேண்டியது தான்... ஒரே நேரத்தில் வெடி மருந்துகள் வெடிப்பதால் வெளியில் இருப்பவர்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்பட வாய்ப்பு இல்லை...'' என்ற கோயா, சிறிது யோசித்தபடி, ''ஆனால், வீடியோ கேமராவில் முழுதுமாக கண்காணிக்கின்றனரே...'' என்றார்.

''வீடியோ கேமரா உங்களிடம் தானே இருக்கிறது. அதனால் சமாளிப்பது சுலபம் தான்...''

''எப்படி...''

''பாதையை அமைக்க தேவையான வெடி மருந்தை தலைவர்களான நீங்கள் மூன்று பேர் மட்டும் தானே வைப்பீர்கள்...''

''ஆமாம்...''

''அப்போது புதிய சுரங்கத்திலிருந்து பழைய சுரங்கம் நோக்கிய பகுதியில் வெடி மருந்தை வையுங்கள். அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் வீடியோ கேமராக்கள் நீங்கள் இருக்கும் திசையை நோக்கி திரும்பாத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான நேரத்தில் வீடியோ கேமரா மீது லேசாக மண்ணை போட்டு வையுங்கள். அப்போது தான் தெளிவான பிம்பம் சுரங்கக்காரர்களுக்கு கிடைக்காது...''

வரிசையாக யோசனையை அள்ளிக்கொடுத்தாள் ரீனா.

''பிரமாதமாக சொல்கிறாய்...''

சிலாகித்தார் கோயா.

''இரண்டு சுரங்கங்களுக்கும் இடையில் பாதையை அமைக்க எத்தனை நாட்கள் ஆகும்...''

''ஒரே நாளில் அமைத்து விடலாம்...''

''ஒரே நாளிலா...''

''காலகாலமாய் சுரங்கம் தோண்டியே பழக்கப்பட்டவர்கள் நாங்கள். இப்போது சுரங்கக்காரர்கள் கொடுக்கும் வெடி மருந்தில் ஒரு பகுதியை பயன்படுத்த போகிறோம். இரண்டு சுரங்கத்திற்கும் இடையில் அதிக துாரம் இல்லை; அவற்றின் திசைகளும் எங்களுக்கு தெரியும். எப்படி வெடி வைத்தால் எப்படி வழி உண்டாகும் என்பதை திட்டமிட்டு செய்யலாம். சரியாக செயல்பட்டால் ஒரே நாளில் பாதையை அமைத்துவிடலாம்...'' என்றார் கோயா.

''சூப்பர்... சூப்பர்...''

பாராட்டினாள் மாலினி.

''இந்த வேலை நடக்கட்டும்... இது முதல் கட்டம் தான். பின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை திட்டமிடலாம்...''

ரீனா சொல்ல கோயாவும், லியோவும் உற்சாகமாயினர்.

''இப்போது கையில் இருக்கும் வெடி மருந்தை என்ன செய்வது.... அதை வைத்துக்கொண்டு திரிவது மிகவும் ஆபத்தானது...''

''அதை பாதுகாப்பாக பூமிக்கு அடியில் புதைத்து வைத்துவிடலாம்...'' என்றாள் ரீனா.

''பூமியின் வெப்பத்தில் அது வெடித்துவிடாதா...''

சந்தேகம் எழுப்பினாள் மாலினி.

''இலைகளில் சுற்றி பூமிக்குள் புதைத்து வைத்தால் வெடி மருந்தை வெப்பம் தாக்காது...''

ஐடியா கூறினார் கோயா.

''அப்படியானால் லியோவுக்கு அடையாளம் தெரியும்படி ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிடுங்கள். எப்போது வேண்டுமோ அப்போது வெளியில் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்...''

ஒப்புக்கொண்டார் கோயா.

''இனி சுரங்கத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் வெடி மருந்துகளை பாதை அமைக்க பயன்படுத்தி கொள்ளுங்கள்...''

''நம்பிக்கை வந்துவிட்டது. இந்த கொடியவர்களின் பிடியில் இருந்து கண்டிப்பாக மீண்டு விடுவோம்...''

கோயா சொல்ல, புன்னகைத்தனர் ரீனாவும், மாலினியும்.

''அந்த சுரங்கக்காரர்கள் பற்றி இன்னும் கூடுதல் தகவல் வேண்டும்...''

''எந்த மாதிரியான தகவல்...''

''நீங்கள் சேகரித்து கொடுக்கும் ரத்தினக் கற்களை அவர்கள் என்ன செய்கின்றனர் என்பது போன்ற தகவல்கள்...''

''நாங்கள் குடியிருப்பையும், சுரங்கத்தையும் தாண்டி வெளியில் செல்வதில்லை என்பதால் எங்களுக்கு தெரியாது. ஆனால், எங்கள் இனப்பெண்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களிடம் விசாரித்து நாளை சொல்கிறேன்...''

''வைரங்களை என்ன செய்கின்றனர் என்பது தானே உங்களுக்கு தெரிய வேண்டும். அது என்ன பிரமாதம்... நான் சொல்கிறேன். நான் இங்கு மரங்களில் தானே சுற்றிக் கொண்டிருக்கிறேன்... அவர்களது நடவடிக்கைகளை நன்கு அறிவேன்...''

குறுக்கிட்டான் லியோ.

''சரி... விபரங்களை சொல்...''

''கூடாரத்தில் இருக்கும் சுரங்கக்காரர்களில் மூன்று பேரை தவிர மீதமுள்ள இரண்டு பேர் ஒரு கைப்பெட்டியில் ரத்தினங்களை வைத்து படகில் எடுத்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்...'' என்றான் லியோ.

''படகு என்றால், அது எந்த வகையிலானது...''

''நீங்கள் பயணிக்கிறீர்களே அதை விட சிறியது தான். மோட்டார் படகு. நான்கு பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடியது...''

''சுரங்கக்காரர்கள் தினமும் வருவதில்லையே...''

''ஆம்... இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை வந்து, அதை எடுத்து செல்வர். சில சமயம் வேறு இரண்டு - மூன்று பேர் வருவதும் உண்டு. அப்படி வருவோரிடம் அந்த பெட்டியை கொடுப்பதையும் பார்த்திருக்கிறேன்...''

''தேடி வருவோர் ஒரே நபர்களாக இருப்பரா அல்லது புதிய நபர்கள் வருகின்றனரா...''

''ஒரே ஆட்கள் தான் எப்போதும் வருவர்...''

தகவல்களை அடுக்கினான் லியோ.



- தொடரும்...

நரேஷ் அருண்குமார்







      Dinamalar
      Follow us