
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
மைதா - 2 தேக்கரண்டி
கேரட், குடைமிளகாய், கோஸ்,
வெங்காயம், பீன்ஸ் - தலா, 100 கிராம்
எண்ணெய், உப்பு, மிளகுத் துாள் -
தேவையான அளவு.
செய்முறை:
கேரட், குடைமிளகாய், கோஸ், வெங்காயம் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை, மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்கறி கலவையை போட்டு வதக்கி உப்பு, மிளகு துாள் சேர்த்து இறக்கவும். ஆறியதும், சிறிய சிறிய ரோல்களாக உருட்டி வைக்கவும்.
மைதாவில் தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கரைக்கவும். உருட்டிய ரோல்களை மைதா கலவையில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மினி வெஜ்ரோல், தயார்.
சாஸுடன் சேர்த்து சாப்பிட, அருமையாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி உண்பர்.
- எஸ்.கவுரி, சிதம்பரம்.

