PUBLISHED ON : அக் 10, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
ஆப்பிள், பீட்ரூட், காரட் - தலா 1
கடலைப்பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 3
சீரகம், உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஆப்பிள், பீட்ரூட், காரட்டை தோல் சீவி துருவவும். கடலைப் பருப்பை, தண்ணீரில் ஊற வைத்து, சீரகம், மிளகாய், உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன், துருவிய ஆப்பிள், பீட்ரூட், காரட், கருவேப்பிலை சேர்த்து பிசைந்து வடைகளாக பிடித்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவை மிக்க, 'ஏபிசி வடை' தயார். சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- மதுபிரியா, சென்னை.
