PUBLISHED ON : அக் 17, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - அரை கப்
பாசிப்பருப்பு மாவு - கால் கப்
சர்க்கரை, வெண்ணெய், எண்ணெய், தண்ணீர், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை மாவுடன், தண்ணீர், வெண்ணெய், உப்பு, சர்க்கரை சேர்த்து, கெட்டியாக பிசையவும். பின், முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.
சுவை மிக்க 'பாசிப்பருப்பு இனிப்பு முறுக்கு' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சாப்பிடுவர்.
- ம.அபிராமி, திருப்பூர்.
