தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பாசிப்பயிறு கிரேவி!

பாசிப்பயிறு கிரேவி!

பாசிப்பயிறு கிரேவி!


PUBLISHED ON : நவ 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

பாசிப்பயிறு -- 1 கப்

பெரிய வெங்காயம் -- 1

தக்காளி -- 2

பச்சை மிளகாய் -- 2

துருவிய தேங்காய் - அரை கப்

இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, சீரகம், எண்ணெய் - சிறிதளவு

மிளகாய்த் துாள், -மஞ்சள் துாள், உப்பு, தண்ணீர், கொத்தமல்லி தழை -- தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பயிறை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளியை வதக்கி, மஞ்சள் துாள், மிளகாய்த் துாள், கரம் மசாலா சேர்த்து கிளறவும்.

பின், வேக வைத்த பாசிப்பயிறு, உப்பு, துருவிய தேங்காய், தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும். கெட்டியானதும் கொத்தமல்லி தழை துாவி இறக்கவும்.

சத்து மிக்க 'பாசிப்பயிறு கிரேவி' தயார். சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

- க.விஜயா, சிதம்பரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us