தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கொள்ளு அடை!

கொள்ளு அடை!

கொள்ளு அடை!


PUBLISHED ON : அக் 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

கொள்ளு பருப்பு - அரை கப்

புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா அரை கப்

துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு - தலா கால் கப்

நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

எள், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு, தண்ணீர், எண்ணெய், கறிவேப்பிலை, - தேவையான அளவு.

செய்முறை:

கொள்ளு பருப்பு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பை சுத்தம் செய்து, தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, கொர கொரப்பாக அரைக்கவும்.

வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், எள்ளை, எண்ணெயில் தாளித்து மாவுடன் நன்கு கலக்கவும். தோசைக்கல் சூடானதும் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சுவை மிக்க, 'கொள்ளு அடை!' தயார். உடல் எடை குறைத்து ஆரோக்கியம் காக்கும்.

செ.பெரியநாயகி, சிதம்பரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us