PUBLISHED ON : ஆக 29, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை - 1 கப்
கோதுமை மாவு - 2 கப்
ஓமம் துாள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய், சீரகம், உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முருங்கைக் கீரையை சுத்தம் செய்யவும். அதனுடன், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, ஓமம் துாள், உப்பு, தண்ணீர் சேர்த்து பூரி பதத்திற்கு பிசையவும். பின், பூரிகளாக,
சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவை மிக்க, 'முருங்கைக் கீரை பூரி' தயார். இரும்பு சத்து நிறைந்தது; காலை உணவாக சாப்பிட ஏற்றது.
- மல்லிகா கோபால், புதுச்சேரி.
தொடர்புக்கு: 96594 46716
