
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
முருங்கைப் பூ - 1 கப்
துவரம் பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு, சீரகம், கடுகு, உப்பு,
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முருங்கை பூவை சுத்தம் செய்து நறுக்கவும். அதனுடன் வேக வைத்த துவரம் பருப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கிள்ளிய காய்ந்த மிளகாய், அரைத்த பூண்டு, சீரகம், கடுகு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து வடையாக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் வேகவைத்து எடுக்கவும்.
சுவை மிக்க, 'முருங்கைப்பூ வடை!' தயார். சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- எம்.ஆர்.தங்கமீனாள், மதுரை.