sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நற்செயல்!

நற்செயல்!

நற்செயல்!


PUBLISHED ON : மே 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...







எங்கள் கிராமத்திலிருந்து, 3 கி.மீ., துாரத்தில் இருந்தது, பள்ளி. பேருந்தில் செல்ல இயலாத வறுமையான குடும்ப சூழ்நிலை. ஒரு பழைய சைக்கிளை அப்பா வாங்கி தர, அதில் சென்று வந்தேன். எங்கள் ஊரை சேர்ந்த வகுப்பு நண்பன், ஒரு மாற்றுத்திறனாளி. அவனையும் சைக்கிளில் உடன் அழைத்து செல்வது வழக்கம்.







எங்கள் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில், சைக்கிள் முழுதும் எரிந்து போனது. மறுநாள், அந்த மன வேதனையுடன் நண்பனுடன் பஸ்சில் பள்ளிக்கு சென்றேன். தகவல் அறிந்து என்னை அழைத்து, ஒரு புதிய சைக்கிளை வழங்கினார், கணக்கு ஆசிரியர் லாரன்ஸ்.







'ஒரு நல்ல செயல், இன்னொரு நற்செயலை துாண்டி விடும். மாற்று திறனாளியான உன் நண்பனுக்கு நீ உதவி செய்தாய்; அதேபோல, இப்போது உனக்கு செய்திருக்கிறேன். ஒவ்வொருவரும் வாய்ப்பு கிடைக்கும் போது சக மனிதருக்கு உதவி செய்ய வேண்டும்...' என்றார். அந்த நிகழ்வும், அறிவுரையும் என் மனதில் ஆழமாக பதிந்தது.







தற்போது, என் வயது, 55. சமூக சேவை பணிகள் செய்து வருகிறேன். பள்ளிப் பருவத்தில் ஆசிரியர் லாரன்ஸ் கூறிய அறிவுரையையும் கடைப்பிடித்து, இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.



- .முருகன், விழுப்புரம்.



தொடர்புக்கு: 97156 40263



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us