
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர் ஸ்டீபன் வில்ட்ஷைர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டனில், 1974ல் பிறந்தார். தத்ரூபமாக ஓவியம் வரைவதில் வல்லவர். பார்க்கும் எதையும் சிறு மாறுதல் இன்றி அப்படியே வரையும் அதீத திறன் உடையவர்.
கண்களால் பார்த்து இவர் வரையும் ஓவியத்தையும், நவீன கேமராவில் அதே கோணத்தில் எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டால் சிறு மாறுதலைக் கூட காணமுடியாது. அவ்வளவு துல்லியமாக வரையும் திறன் உடையவர். ஹெலிகாப்டரில் பறந்து கண்ணில் படும் காட்சிகளை ஓவியமாக தீட்டி, உலகப் புகழ்பெற்றவர் ஸ்டீபன்.

