PUBLISHED ON : செப் 05, 2026

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பாலக் கீரை - 1 கட்டு
மாங்காய் - 1
காய்ந்த மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு, எண்ணெய்,
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
வாணலில் எண்ணெய் சூடானதும் சுத்தம் செய்த பாலக் கீரையை போட்டு நன்கு வதக்கவும். பின், நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய தக்காளி, தோல் சீவி வெட்டிய மாங்காய், பூண்டு சேர்த்து வதக்கி, பின் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். இந்த கலவையில் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
சுவை மிக்க, 'பாலக் கீரை சட்னி' தயார். இட்லி மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். சுவை அபாரமாக இருக்கும்!
- கிருஷ்ணவேணி ஸ்ரீதரன்,
சென்னை.
