தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பயத்தை வென்ற நம்பிக்கை!

பயத்தை வென்ற நம்பிக்கை!

பயத்தை வென்ற நம்பிக்கை!


PUBLISHED ON : ஜூலை 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை மாவட்டம், நாகமலை, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2022ல், 12ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...

பள்ளியில் நடக்கவிருந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்க என் பெயரையும் பதிவு செய்திருந்தார், வகுப்பாசிரியர் விஜய்சங்கர். மிகவும் கூச்ச சுபாவம் உடைய எனக்கு மனம் பதறியது. தயக்கத்தால் பங்கேற்க மறுத்தேன். மிகுந்த கனிவுடன், 'இந்த ஒரு முறை முயற்சி செய்; நன்றாக பயிற்சி செய்து வா... நீயே ஆச்சரியப்படும் அளவு நல்ல அனுபவம் ஏற்படும்...' என உற்சாகப்படுத்தினார், வகுப்பாசிரியர்.

பயத்தால் மிக மெதுவாக தான் பயிற்சியை ஆரம்பித்தேன். வீட்டில் ஆளுயர நிலைக்கண்ணாடி முன் நின்று பேசி, பாவனை செய்தேன். வார்த்தைகள் தடுமாறின; விடாமல் முயன்றேன். போட்டி நாளன்று, கைகள் நடுங்க, இதயம் வேகமாக துடித்தது. தைரியத்தை வரவழைத்து, மேடையில் ஏறி பேச துவங்கியதும், பயம் குறைந்தது; நம்பிக்கை அதிகரித்தது.

போட்டியில் பரிசு கிடைக்காவிட்டாலும், பலரும் கரஒலி எழுப்பி பாராட்டியது மகிழ்ச்சி தந்தது. அந்த அனுபவம், மிகப்பெரிய வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைந்தது.

என் வயது, 24; கல்லுாரியில் எம்.டெக்., படித்து வருகிறேன். பயத்தை எதிர்கொள்வதற்கு எடுக்கும் முயற்சியே, முன்னேற வைக்கும் என்பதை வகுப்பில் புரிய வைத்த, ஆசிரியர் விஜய்சங்கரை வணங்கி மகிழ்கிறேன்.

- ப.ராகுல், மதுரை.

தொடர்புக்கு: 94893 25168


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us